Advertisement

இன்று இலங்கை செல்கிறார் நிர்மலா சீதாராமன்

By: vaithegi Wed, 01 Nov 2023 3:02:11 PM

இன்று இலங்கை செல்கிறார் நிர்மலா சீதாராமன்

இந்தியா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் அரசு முறை பயணமாக இன்று இலங்கை செல்லவுள்ளார் ...இதையடுத்து அங்கு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் SBI வாங்கி கிளைகளை திறந்துவைக்கும் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாண நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

அதன் பின்னர், இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்த 200வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், இலங்கை அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட NAAM 200 இல் உரையாற்றுவார். இந்த நிகழ்வில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

nirmala sitharaman,sri lanka ,நிர்மலா சீதாராமன்,இலங்கை


இதையடுத்து, கொழும்பில் நடைபெறும் இந்திய இலங்கை வர்த்தக உச்சி மாநாட்டில் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவது பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும், இந்த பயணத்தின்போது மத ஸ்தலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில், இலங்கைத் தலைமையுடன் அவர் கலந்துரையாடவுள்ளார்.

Tags :