Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் ஆண்டுகளில் இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் ... நிர்மலா சீதாராமன்

வரும் ஆண்டுகளில் இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் ... நிர்மலா சீதாராமன்

By: vaithegi Thu, 15 Dec 2022 3:18:00 PM

வரும் ஆண்டுகளில் இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்   ...    நிர்மலா சீதாராமன்

இந்தியா: குறைய இருக்கும் விலைவாசி .... நாடு முழுவதும் கொரோனா பரவலுக்கு பின் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகள் பல பொருளாதார வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அதில் இருந்து மீண்டு வர பல்வேறு முயற்சிகளை அரசு செய்து கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்த நிலையில் இது குறித்து லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசுகையில், நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த மாதத்தை போல இல்லாமல் நவம்பர் மாதத்தில் 5.8 சதவீதமாக குறைந்திருந்தது.

nirmala sitharaman,india , நிர்மலா சீதாராமன் ,இந்தியா

ரிசர்வ் வங்கியின் கணக்குபடி அதிகபட்ச வரம்பை விட தற்போது பணவீக்கம் குறைந்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருள்கள் பற்றி அரசு கண்காணித்து கொண்டு வருகிறது. சில்லறை பணவீக்கம் குறைந்து வருவதால் விலைவாசி உயர்வை மேலும் குறைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே வரும் ஆண்டுகளில் இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2022 – 2023 நிதியாண்டுக்கான 3.25 லட்சம் கோடி ரூபாய் துணை மானியக் கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார்.

Tags :