Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் வருகிற 7-ந் தேதி (நாளை) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்

டெல்லியில் வருகிற 7-ந் தேதி (நாளை) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்

By: vaithegi Sat, 06 Aug 2022 08:57:03 AM

டெல்லியில் வருகிற 7-ந் தேதி (நாளை) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்

புதுடெல்லி: நிதி ஆயோகின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் தலைமை தாங்குகிறார்.

இதை அடுத்து வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல், மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை பற்றி நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

niti aayog meeting,delhi , நிதி ஆயோக் கூட்டம் , டெல்லி

மேலும் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின் முதல் முறையாக தற்போது இந்த கூட்டம் நேரடியாக நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் துணைநிலை கவர்னர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோகின் துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர்கள், மத்திய மந்திரிகள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags :