Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பீகாரில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை பார்வையிட்ட முதல் மந்திரி நிதிஷ்குமார்

பீகாரில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை பார்வையிட்ட முதல் மந்திரி நிதிஷ்குமார்

By: Karunakaran Sun, 09 Aug 2020 2:22:10 PM

பீகாரில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை பார்வையிட்ட முதல் மந்திரி நிதிஷ்குமார்

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பீகார், அசாம் போன்ற மாநிலங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது. பீகாரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்ததால், மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், அங்குள்ள மக்கள் வசிக்கும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைப் போக்குவரத்தும் தூண்டிக்கப்பட்டது.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பீகாரில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

nitish kumar,flood- areas,bihar,chief minister ,நிதீஷ் குமார், வெள்ளப் பகுதிகள், பீகார், முதல்வர்

தற்போது பீகாரில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை முதல் மந்திரி நிதிஷ்குமார் பார்வையிட்டார். வெள்ளத்தால் அதிகம் பாதிப்பு அடைந்த பகல்பூர், தர்பங்கா, முங்கர், புர்னியா மற்றும் கோசி போன்ற பகுதிகளை முதல் மந்திரி நிதிஷ்குமார் பார்வையிட்டார்.

இதுகுறித்து முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், வெள்ளத்தால் அதிகம் பாதிப்பு அடைந்த பகல்பூர், தர்பங்கா, முங்கர், புர்னியா மற்றும் கோசி போன்ற பகுதிகளை முதல் மந்திரி நிதிஷ்குமார் அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார் எனவும், மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை விரைந்து செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|