Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • என்.எல்.சி. விவகாரத்தில் இழப்பீட்டுக்கு பதில் நிறுவனத்தை மூடுவதே தீர்வு

என்.எல்.சி. விவகாரத்தில் இழப்பீட்டுக்கு பதில் நிறுவனத்தை மூடுவதே தீர்வு

By: Nagaraj Wed, 03 May 2023 11:53:18 PM

என்.எல்.சி. விவகாரத்தில் இழப்பீட்டுக்கு பதில் நிறுவனத்தை மூடுவதே தீர்வு

சென்னை: தீர்வு இதுதான்... என்.எல்.சி. விவகாரத்தில் இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக நிறுவனத்தையே மூடுவதே தீர்வாக இருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவன விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், அதிமுக எம்.எல்.ஏ. அருண்மொழிதேவன், திமுக எம்எல்ஏ. சபா ராஜேந்திரன், என்எல்சி உயர் அதிகாரிகள், கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

comment,company,compensation,dear ramadoss,nlc,settlement, ,அன்புமணி ராமதாஸ், இழப்பீடு, என்எல்சி, கருத்து, தீர்வு, நிறுவனம்

கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படாததால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீரென தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்டாவை ஒட்டி 6 சுரங்கப்பாதைகள் அமைக்கப் போவதாக கூறப்படுவதால் முதல்வர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தங்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் உறுதியளித்தார். மேலும் ஆலோசனை நடத்தும் வரை நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்தி வைக்குமாறு தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் வேல்முருகன் தெரிவித்தார்.

Tags :
|