Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது

இந்தியாவில் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது

By: vaithegi Tue, 25 July 2023 2:08:19 PM

இந்தியாவில் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது

இந்தியா: ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு செப்டம்பர் 30 தான் கடைசி நாள் ... இந்தியாவில் கடந்த 2016 -ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரூபாய் 2000 மதிப்புள்ள நோட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் இல்லை. அதனால் அவற்றை அதை பெற முடிவு செய்து உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

மேலும், வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கியின் மூலமாக ரூபாய் 2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

rs.2000 note,tenure , ரூ.2000 நோட்டு, கால அவகாசம்

இதையடுத்து தற்போது வரை கிட்டத்தட்ட 87 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. மேலும், இன்னும் பல கோடி மதிப்புள்ள ரூபாய் 2000 நோட்டுகள் வங்கிகளில் மாற்றம் செய்யப்படாமலே இருக்கும் நிலையில் ரூபாய் நோட்டுக்களை மாற்றம் செய்வதற்கு கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படாது.

இன்னும் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு 2 மாதங்கள் உள்ள நிலையில் கூடிய விரைவிலேயே வங்கிகளில் டெபாசிட் அல்லது மாற்றம் செய்து கொள்ளுமாறு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்து உள்ளார்.

Tags :