Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடிப்படை வசதிகள் இல்லை... கொந்தளித்த மாணவிகள் கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை நொறுக்கினர்

அடிப்படை வசதிகள் இல்லை... கொந்தளித்த மாணவிகள் கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை நொறுக்கினர்

By: Nagaraj Wed, 13 Sept 2023 07:04:38 AM

அடிப்படை வசதிகள் இல்லை... கொந்தளித்த மாணவிகள் கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை நொறுக்கினர்

பீகார்: அடிப்படை வசதிகள் இல்லாதததால் பீகாரில் கொந்தளித்த பள்ளி மாணவிகள் கல்வித் துறை அதிகாரி வாகனத்தை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தின் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் பாட்னாவை அடுத்த வைஷாலி மாவட்டத்தில் உள்ள மனார் பிளாக்-இல் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து மாணவிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகளின் வாகனத்தை பள்ளி மாணவிகள் அடித்து நொறுக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

controversy,security,education,officer,schoolgirls ,சர்ச்சை, பாதுகாப்பு, கல்வித்துறை, அதிகாரி, பள்ளி மாணவிகள்

போராட்டத்தில் ஈடுபட்ட போது, பெண் காவல் துறை அதிகாரி ஒருவர் தங்களை அடித்த காரணத்தால் தான், கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை அடித்து நொறுக்கியதாக பள்ளி மாணவிகள் தெரிவித்து உள்ளனர். மதன் சவுக் மற்றும் படேல் சவுக் அருகில் உள்ள மனார் மௌதிநகர் பிரதான சாலையை மாணவிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை கோரிக்கை விடுத்தும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று மாணவிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

பள்ளி மாணவிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டது, போராட்டத்தின் போது கல்வித் துறை அதிகாரியின் வாகனம் மாணவிகளால் அடித்து நொறுக்கப்பட்டது போன்ற சம்பவங்களால் அந்த பகுதியில் பதற்ற நிலை உருவாகி இருக்கிறது. மேலும் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags :