Advertisement

சாதி மதம் இல்லை என்று சான்றிதழ்..

By: Monisha Sun, 03 July 2022 7:47:27 PM

சாதி மதம் இல்லை என்று சான்றிதழ்..

கோவை: கோவையில் மூன்று வயது மகளுக்கு எந்தவித சாதி, மதம் சாராதவர் என்று சான்றிதழ் பெற்றுள்ளனர். குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் வேலை வாய்ப்பு என அனைத்திருக்கும் சாதி சான்றிதழ் அவசியமானது என்பதால் வருவாய் துறை வழங்கும் சாதி சான்றிதழியில் , சம்மதபட்டவரின் மதமும் குறிப்பிடப்படும்.
ஆனால் தன்னை பொறுத்தவரை கடவுள் என்பது அன்பு மட்டும் என்பதையும், அனைவரும் சமம் என்பதையும் தனது மகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால், சாதி மாதம் சாராதவர் என்ற சான்றிதழை நாங்கள் பெற்று உள்ளோம் என்று கூறினார்கள்.

certificate,no caste,religion,god ,கோவை,குழந்தை,வேலை,கடவுள்,

மாணவர்கள் பள்ளிகளில் சேர்பதற்க்கான விண்ணப்பத்தில் சாதி மதம் குறிப்பிட தேவையில்லை என்று தமிழக அரசு கடந்த 1973 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் அரசாணை பிறப்பித்து உள்ளது.
ஆனாலும் பள்ளிகளில் கல்வி தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சாதி சான்றிதழ் அவசியமாகிறது. எதிர் காலத்தில் தனது மகள் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவைகளுக்கு அரசு வழங்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளுக்கு விண்ணபிக்க மாட்டார் என உறுதிமொழி அளித்து இந்த சான்றிதழை பெற்றனர்.
இது கோவை மாவட்டத்தில் முதல் முறையாக வழங்க பட்டது.

Tags :