Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க வாய்ப்பு இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க வாய்ப்பு இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

By: Monisha Tue, 25 Aug 2020 3:02:07 PM

தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க வாய்ப்பு இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு இல்லை என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஜூன் 1-ந் தேதியில் இருந்து மாதந்தோறும் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, பெரும்பாலானவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 10-ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, வரும் 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசு மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி வழங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

tamil nadu,theaters,curfews,kadampur raju ,தமிழ்நாடு,தியேட்டர்கள்,ஊரடங்கு தளர்வுகள்,கடம்பூர் ராஜூ

இது தொடர்பாக தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:- "மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு இல்லை. கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர்தான் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். குறைந்த ரசிகர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் அது தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஓடிடி-யில் படத்தை வெளியிடுவது சினிமா துறைக்கு ஆரோக்கியமானது அல்ல. தியேட்டர்களை திறக்க சிறிது காலம் ஆவதால் ஓடிடி-யில் படத்தை வெளியிடுவதை விட பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்" என்றார்.

Tags :