Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகளின் போராட்டத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பு இல்லை - விவசாய சங்கம் கடிதம்

விவசாயிகளின் போராட்டத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பு இல்லை - விவசாய சங்கம் கடிதம்

By: Karunakaran Sun, 20 Dec 2020 11:47:38 AM

விவசாயிகளின் போராட்டத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பு இல்லை - விவசாய சங்கம் கடிதம்

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடும்படி வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், கடிதம் எழுதியிருந்தார்.

வேளாண் துறை மந்திரி தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளதாகவும், இந்த கடிதத்தை விவசாயிகள் அனைவரும் படிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாகவும் மோடி குற்றம்சாட்டினார். இந்நிலையில், அகில இந்திய விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு (ஏஐகேஎஸ்சிசி) நேற்று பிரதமர் மோடி மற்றும் வேளாண் மந்திரி தோமர் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது.

struggle,peasants,political parties,farmers union ,போராட்டம், விவசாயிகள், அரசியல் கட்சிகள், உழவர் சங்கம்

அந்த கடிதத்தில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் எதிர்க்கட்சிகளால் வடிவமைக்கப்படுவதாக அரசாங்கம் கருதுவது தவறானது என்று கூறப்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால், விவசாயிகளின் போராட்டத்தால், அரசியல் கட்சிகள் தங்கள் பார்வைகளை மாற்றும் நிலை ஏற்பட்டது. அரசியல் கட்சிகள் போராட்டத்தை தூண்டிவிடுவதாக தாங்கள் (பிரதமர்) கூறுவது தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், போராட்டம் நடத்தும் விவசாய சங்கங்கள், அமைப்புகளின் எந்த ஒரு கோரிக்கையும் அரசியல் கட்சியுடன் இணைக்கப்படவில்லை என கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியின் எல்லைப்பகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் 40 விவசாய சங்கங்களில் அகில இந்திய விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :