Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தப்போவது இல்லை - எடியூரப்பா

பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தப்போவது இல்லை - எடியூரப்பா

By: Karunakaran Fri, 26 June 2020 12:33:03 PM

பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தப்போவது இல்லை - எடியூரப்பா

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த கர்நாடகத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

பெங்களூருவில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்டோர் கொரோனா காரணமாக பாதிப்படைத்துள்ளனர். இதனால் கொரோனா பரவலை தடுக்க பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகி வந்தன.

yeddyurappa,bengaluru,karanataka,curfew ,பெங்களூரு,எடியூரப்பா,ஊரடங்கு,கர்நாடகா

இந்நிலையில் நேற்று எடியூரப்பா தலைமையில் விதான சவுதாவில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் நடைபெற்றபோது, பெங்களூருவில் எக்காரணம் கொண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறுகையில், பெங்களூருவில் 6 வார்டுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், அந்த பகுதிகளை மட்டும் முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பெங்களூருவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானால், 6 முதல் 7 மணி நேரத்திற்குள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ கல்லூரிகளில் 10 ஆயிரம் படுக்கைகள் இருப்பதாகவும், கர்நாடகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 61 சதவீதம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :