Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் இல்லை... நிதிஷ்குமார் தகவல்

பிரதமர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் இல்லை... நிதிஷ்குமார் தகவல்

By: Nagaraj Sun, 01 Jan 2023 3:34:00 PM

பிரதமர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் இல்லை... நிதிஷ்குமார் தகவல்

பாட்னா: பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார், பிரதமர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்கள் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இந்த பட்டியலில் சந்திரசேகர ராவ், சரத்பவார், நிதிஷ்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது.

பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார், பிரதமர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

amruta,nitishkumar,rahul, ,அம்ருதா, நிதிஷ் குமார், ராகுல்

மேலும், பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஒன்றிணைப்பதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி புதிய இந்தியாவின் தந்தை என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் கூறியது குறித்து கருத்து தெரிவித்த நிதிஷ் குமார், புதிய இந்தியாவின் தந்தை தேசத்திற்கு என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பினார்.

அவர்களுக்கும் சுதந்திர போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஆர்எஸ்எஸ் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|
|