Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முகக்கவசம் இல்லையா... அப்போ அபராதம் ரூ.500; ஹரியானா அரசு உத்தரவு

முகக்கவசம் இல்லையா... அப்போ அபராதம் ரூ.500; ஹரியானா அரசு உத்தரவு

By: Nagaraj Wed, 27 May 2020 9:01:57 PM

முகக்கவசம் இல்லையா... அப்போ அபராதம் ரூ.500; ஹரியானா அரசு உத்தரவு

முகக்கவசம் அணியாவிடில் அபராதம்... ஹரியானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் நான்காம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.


fines,haryana,face coverings,fines,notice ,
அபராதம், ஹரியானா, முகக்கவசம், அபராதம், அறிவிப்பு

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோன்று பொது இடங்களில் எச்சில் துப்பினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|