Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை - இந்திய ராணுவம்

லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை - இந்திய ராணுவம்

By: Karunakaran Tue, 08 Sept 2020 2:09:29 PM

லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை - இந்திய ராணுவம்

லடாக் எல்லை பகுதியில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பின், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. மேலும், இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன. பின்னர் போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக பாதுகாப்பு மந்திரிகள் மட்டம் உள்பட பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தற்போது இரு நாட்டு எல்லைகளுக்கும் முக்கிய இடமாக உள்ள லடாக்கின் லே-யில் உள்ள பாங்காங் ஏரிப்பகுதியில் இந்திய-சீன படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சீன ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்திய ராணுவத்தினர் அத்துமீறி எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை கடந்து, ரோந்து பணியில் இருந்த சீன வீரர்களை எச்சரிக்கும் விதமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்திய படையினரின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால் சீனா வீரர்களு பதில் தாக்குதல் நடத்தினர் என்று கூறினார்.

firing,border,ladakh,indian army ,துப்பாக்கி சூடு, எல்லை, லடாக், இந்திய ராணுவம்

இந்தியாவின் இந்த நடவடிக்கை மிகவும் மோசமான நிகழ்வாகும். அபாயகரமான நடவடிக்கைகள் எடுப்பதை இந்திய தரப்பு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என தெரித்துக்கொள்கிறோம் என்று சீன ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார். தற்போது, லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய- சீனா எல்லை பகுதியில் இந்திய தரப்பில் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. சீனா ராணுவம் தான் வானில் துப்பாக்கி சூடு நடத்தியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|