Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இலலை; ஈரான் மூத்த மதத் தலைவர் அறிவிப்பு

இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இலலை; ஈரான் மூத்த மதத் தலைவர் அறிவிப்பு

By: Nagaraj Sat, 01 Aug 2020 3:31:42 PM

இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இலலை; ஈரான் மூத்த மதத் தலைவர் அறிவிப்பு

இனி பேச்சுவார்த்தை இல்லை... அணு ஆயுதச் சோதனை மற்றும் ஏவுகணை சோதனை தொடர்பாக, இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என ஈரானின் மூத்த மதத் தலைவரான அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதச் சோதனை, ஆளில்லா விமான தாக்குதல் மற்றும் சவுதி அரேபியா எண்ணெய்க் கப்பல்கள் தாக்குதல் என பல்வேறு காரணங்களால், இரு நாடுகளுக்கிடையில் தொடர்ந்தும் மோதல் அதிகரித்து வருகின்றது.

இதனால் ஆத்திரம் கொண்ட அமெரிக்கா, ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனிடையே சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக உள்ள ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு அமெரிக்கா செவி சாய்ப்பதாக இல்லை.

national capacity,oil,exports,iran,negotiations ,தேசிய திறன், எண்ணெய், ஏற்றுமதி, ஈரான், பேச்சுவார்த்தை

இந்தநிலையில், அணு ஆயுதச் சோதனை மற்றும் ஏவுகணை சோதனை தொடர்பாக, இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என ஈரானின் மூத்த மதத் தலைவரான அயத்துல்லா அலி காமெனி; தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அமெரிக்காவின் கொடுமையான பொருளாதாரத் தடைகள் ஈரானின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவது, ஏவுகணை மற்றும் அணுசக்தி சோதனைகளை நிறுத்துவது அமெரிக்காவின் நோக்கம்.

தேசிய திறன்களை நம்புவதும், எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதும் நம் மீதான அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்க்க உதவும்’ என கூறினார்.

Tags :
|
|