Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒடிசா ரயில் விபத்து .. இதுவரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை ... அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒடிசா ரயில் விபத்து .. இதுவரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை ... அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By: vaithegi Sun, 04 June 2023 09:38:40 AM

ஒடிசா ரயில் விபத்து ..   இதுவரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை   ...   அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே நேற்று முன் தினம் இரவு பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்கு உள்ளாகின. இதையடுத்து இந்த கோர விபத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகளவில் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுவரை ஒடிசா ரயில் விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழக பயணிகள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தனர். ஒடிசாவின் பதராக்-சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் 131 தமிழக பயணிகள் அழைத்துவரப்பட்டனர். ஒடிசாவிலிருந்து சிறப்பு ரெயில் அதிகாலை 4.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் நடைமேடை 11-ஐ வந்தடைந்தது.

minister m. subramanian,odisha train accident,rail ,அமைச்சர் மா.சுப்பிரமணியன்,ஒடிசா ரயில் விபத்து ,ரெயில்


இதனை அடுத்து சிறப்பு ரெயிலில் வந்த பயணிகளை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் அவர்களை வரவேற்றனர். அதன் பின்னர் சிறப்பு ரெயிலில் வந்த பயணிகளிடம் நலம் விசாரித்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: ஒடிசாவுக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 6 மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்து 8 பேர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். மீட்கப்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டு உள்ளது. யாருக்கும் தீவிர சிகிச்ச்சைகான பெரிய பாதிப்புகள் இல்லை. 305 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். 205 படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை என அவர் கூறினார்.

Tags :