Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை... அமைச்சர் தகவல்

தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை... அமைச்சர் தகவல்

By: Nagaraj Sun, 24 July 2022 5:44:54 PM

தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை... அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் இல்லை... தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் கொரோனா தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த போட்டியில், தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

minister,olympiad,monkey measles,airport,tamil nadu ,
அமைச்சர், ஒலிம்பியாட், குரங்கு அம்மை, விமான நிலையம், தமிழகம்

தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று இல்லை. குரங்கு அம்மை பரவலை தடுக்க கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. செஸ் ஒலிம்பியாட் வீரர்கள் தங்குவதற்கு 24 விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


இந்தியாவை பொறுத்தவரை கேரளத்தைச் சேர்ந்த 3 பேர், டில்லியில் ஒருவருக்கு என இதுவரை 4 பேருக்கு குரங்கு அம்மை உறுதியாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :