Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பீஜிங்கில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்குதல் இல்லை

பீஜிங்கில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்குதல் இல்லை

By: Karunakaran Mon, 28 Sept 2020 09:36:47 AM

பீஜிங்கில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்குதல் இல்லை

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.32 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.45 கோடியைக் கடந்துள்ளது.

beijing,corona virus,china,corona impact ,பெய்ஜிங், கொரோனா வைரஸ், சீனா, கொரோனா தாக்கம்

இந்நிலையில், சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்குதல் இல்லை என்று நகராட்சி சுகாதார ஆணையம் கூறுகிறது. அதுமட்டுமின்றி வெளி இடங்களில் இருந்து பீஜிங் வந்தவர்களுக்கும் புதிதாக தொற்று பதிவாகவில்லை.

யாருக்கும் அறிகுறிகளற்ற தொற்று பாதிப்போ, கொரோனா பாதிப்பின் சந்தேகமோ கூட ஏற்படவில்லை. கடந்த 19-ந் தேதிக்கு பின்னர் 24-ந் தேதியன்றுதான் வெளி இடத்தில் இருந்து வந்த ஒருவருக்கு அங்கு தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

Tags :
|