Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைகூட யாரும் எடுக்க அனுமதிக்கக்கூடாது - மாயாவதி

இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைகூட யாரும் எடுக்க அனுமதிக்கக்கூடாது - மாயாவதி

By: Karunakaran Thu, 18 June 2020 09:56:05 AM

இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைகூட யாரும் எடுக்க அனுமதிக்கக்கூடாது - மாயாவதி

சமீபத்தில் லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. பின்னர் இருநாட்டு உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மோதல் ஏற்படுவதை தடுத்தனர். இந்நிலையில் மீண்டும் லடாக் பகுதியில் உள்ள இந்திய-சீன எல்லைப்பகுதியில் இருநாட்டு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்திய-சீன எல்லையில் நடைபெற்ற இந்த மோதலால் போர் ஏற்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் இருநாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணமடைந்தது குறித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

mayawati,bahujan samaj,india-chinese border,clash ,மாயாவதி, பகுஜன் சமாஜ்,இந்திய சீன எல்லை, மோதல்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சீனாவுடன் நடந்த மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அளிக்கிறது. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியாவின் பெருமையையும், புகழையும் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் என்று நாட்டு மக்கள் நம்புகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைகூட யாரும் எடுக்க அனுமதிக்கக்கூடாது. இந்த நெருக்கடியான நேரத்தில் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒட்டுமொத்த தேசமும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags :