Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று நடைபெறும் முழு அடைப்பில் பங்கேற்குமாறு யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது - விவசாய அமைப்புகள்

இன்று நடைபெறும் முழு அடைப்பில் பங்கேற்குமாறு யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது - விவசாய அமைப்புகள்

By: Karunakaran Tue, 08 Dec 2020 11:06:46 AM

இன்று நடைபெறும் முழு அடைப்பில் பங்கேற்குமாறு யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது - விவசாய அமைப்புகள்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக நடந்து வரும் இந்த போராட்டத்தால் டெல்லி முழுவதும் முடங்கி வருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாய அமைப்புகள் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றன.விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஆம் ஆத்மி என பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்து உள்ளன. இதைப்போல பல்வேறு தொழிற்சங்கங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பில் பங்கேற்கப்போவதாக அறிவித்து உள்ளன.

full blockade,agricultural organizations,delhi,farmers struggle ,முழு முற்றுகை, விவசாய அமைப்புகள், டெல்ஹி, விவசாயிகள் போராட்டம்

இந்த முழு அடைப்பு தொடர்பாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று கூடி ஆலோசனை நடத்தியபின் அளித்த பேட்டியில், நாடு முழுவதும் போராட்டங்களை தூண்டியிருக்கும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இவற்றை திரும்பப்பெறுவதை தவிர வேறு எந்த தீர்வையும் நாங்கள் விரும்பவில்லை. இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெறும் முழு அடைப்பு நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும். ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தி இந்த போராட்டத்தில் பங்கேற்க வைக்க வேண்டாம் என, எங்களுக்கு ஆதரவு அளிக்கும் அமைப்புகளிடம் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

மேலும் அவர்கள், முழு அடைப்பு நடத்தப்பட்டாலும் அவசரகால சேவைகள் அனுமதிக்கப்படும். இந்த போராட்டத்தை அமைதியாக நடத்துமாறு விவசாயிகள் மற்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். எவ்வித குழப்பத்திலும், மோதலிலும் ஈடுபடக்கூடாது. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பலனளிக்கும் என்று முதலில் கூறிய மத்திய அரசு, தற்போது அதில் திருத்தம் மேற்கொள்ள சம்மதித்து இருப்பதேன்? பழைய சட்டங்கள் விவசாயிகளுக்கு ஊறு விளைவிக்கும் என்று அரசு எண்ணினாலும், அதையே மீண்டும் கொண்டு வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினர்.

Tags :
|