Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் ஜூலை 31-ம் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை - மணீஷ் சிசோடியா

டெல்லியில் ஜூலை 31-ம் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை - மணீஷ் சிசோடியா

By: Karunakaran Sat, 27 June 2020 09:35:32 AM

டெல்லியில் ஜூலை 31-ம் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை - மணீஷ் சிசோடியா

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், கொரோனா பரிசோதனைகள் அதிகரித்ததாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. டெல்லியில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தற்போது, டெல்லியில் ஜூலை 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

manish sisodia,delhi,schools open,corona virus ,மணீஷ் சிசோடியா,பள்ளிகள் திறப்பு,டெல்லி,கொரோனா வைரஸ்

கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்குபின் பின் இதுகுறித்து டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, ஜூலை 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை 50 சதவீதம் அளவுக்கு குறைக்கும் திட்டம் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது புதிய சூழலுக்கு தகுந்தாற் போல் தயாராக திட்டம் உருவாக்கப்படும். எனவே மாணவர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள உதவும் வகையில் இந்த திட்டம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|