Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு பேருந்துகளில் 5 வயது வரை டிக்கெட் கட்டணமில்லை .. அரசாணை வெளியீடு

அரசு பேருந்துகளில் 5 வயது வரை டிக்கெட் கட்டணமில்லை .. அரசாணை வெளியீடு

By: vaithegi Wed, 24 May 2023 2:57:03 PM

அரசு பேருந்துகளில் 5 வயது வரை டிக்கெட் கட்டணமில்லை  ..  அரசாணை வெளியீடு

சென்னை: அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் ...... தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மே -5ம் தேதி போக்குவரத்து துறை மானிய கோரிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் .

இதையடுத்து அதில் அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் ஒன்றிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம் ஏற்பாடு செய்யப்படும். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பசுமை பெட்டிகளை வாடகைக்கு விடுதல் , 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டிடம் இல்லா பயணம் செயல்படுத்துதல் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

ticket,govt bus ,டிக்கெட் ,அரசு பேருந்து

இந்த நிலையில் அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் இல்லை என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரசு பேருந்து கட்டணம் இல்லை என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலுள்ள குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம் .

ஏற்கனவே 3 வயது வரையிலான குழந்தைகள் கட்டணம் இன்றி பயணித்து வரும் நிலையில் வயதுவரம்பு 5 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் அரை டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Tags :
|