Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரானைச் சேர்ந்த நர்கிஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஈரானைச் சேர்ந்த நர்கிஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

By: Nagaraj Sat, 07 Oct 2023 2:06:38 PM

ஈரானைச் சேர்ந்த நர்கிஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஓஸ்லோ: அமைதிக்கான நோபல் பரிசு இந்தாண்டு, ஈரானை சேர்ந்த நர்கிஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்களுக்கும் அமைதிக்காகப் பாடுபட்டவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

நார்வே அமைதிக்கான நோபல் பரிசை வழங்குகிறது. மற்ற பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது. நோபல் பரிசு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அதன்படி 2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஈரானைச் சேர்ந்த நர்கிஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

announcement,human rights,nobel-peace , நர்கிஸ் முகமதி, நோபல் பரிசு, மனித உரிமை

ஈரானில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் நர்கிஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பெண்களுக்காக போராடி பலமுறை சிறை சென்ற நர்கீஸ் முகமதி இன்னும் சிறையில் இருக்கிறார்.

நர்கீஸ் முகமதி ஈரானில் பெண்கள் உரிமைக்காக மட்டுமல்ல மனித உரிமைகளுக்காகவும் போராடி வருகிறார். பெண்கள் உரிமைக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடிய நர்கிஸ் முகமதி ஈரான் அரசால் 13 முறை கைது செய்யப்பட்டுள்ளார்.

நர்கிஸ் 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இன்னும் சிறையில் இருக்கிறார். பெண்களின் உரிமைக்காகப் போராடிய நர்கிஸ் முகமதி ஈரான் அரசால் 154 முறை கசையடி பெற்றுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டாலும், நர்கிஸ் முகமதி இன்னும் சிறையில் இருக்கிறார்.

பெண்கள் உரிமைக்காக போராடியதற்காக நர்கிஸ் முகமதிக்கு 5 சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பெண்கள், வாழ்க்கை மற்றும் சுதந்திரம் என்ற தலைப்பில் பெரும் போராட்டம் வெடித்தபோது நர்கிஸ் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :