Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகள், கல்லூரிகளில் முகக்கவசம் அணிவதை நொய்டா அரசு கட்டாயமாக்கியுள்ளது

பள்ளிகள், கல்லூரிகளில் முகக்கவசம் அணிவதை நொய்டா அரசு கட்டாயமாக்கியுள்ளது

By: vaithegi Sun, 16 Apr 2023 1:17:50 PM

பள்ளிகள், கல்லூரிகளில் முகக்கவசம் அணிவதை  நொய்டா அரசு கட்டாயமாக்கியுள்ளது

நொய்டா : கொரோனா பரவல் நாடு முழுவதும் பல மாநிலங்களில் வேகமெடுக்க தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் நொய்டாவில் கௌதம் புத்த நகர் சுகாதாரத் துறை, கொரோனாவை கட்டுப்படுத்த சில பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது. எனவே அதன் படி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பள்ளி ஊழியர்கள் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் முகக்கவசம் அணிய வேண்டும். இதையடுத்து அவ்வாறு அணியாமல் வந்தால் அவர்கள் கல்வி நிறுவனத்திற்குள் வர அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

face mask,schools,college ,முகக்கவசம் ,பள்ளிகள், கல்லூரி


அதைத்தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வகுப்பறைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு நொய்டா சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு கை சோப்புகள் மற்றும் சானிடைசர்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யுமாறு கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கல்வி நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்களின் நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேனிங் பொருத்த வேண்டும் எனவும், காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மாணவர்களுக்கு பூஸ்டர் டோஸ் உட்பட வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags :