Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 11-ந்தேதியில் இருந்து மீண்டும் இயக்கம்

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 11-ந்தேதியில் இருந்து மீண்டும் இயக்கம்

By: vaithegi Tue, 05 July 2022 09:19:25 AM

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 11-ந்தேதியில் இருந்து மீண்டும் இயக்கம்

சென்னை: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கீழ்க்கண்ட முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம்.

அதன்படி திருப்பதி-காட்பாடி (வண்டி எண்:07581) இடையே காலை 10.55 மணிக்கும் மறுமார்க்கமாக காட்பாடி-திருப்பதி(07582) இடையே இரவு 9.55 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந்தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படுகிறது.

express trains,unreserved ,எக்ஸ்பிரஸ் ரெயில்கள்,முன்பதிவில்லாத

மேலும், விழுப்புரம்-மயிலாடுதுறை(வண்டி எண்:06691) இடையே மதியம் 2.25 மணிக்கும் மறுமார்க்கமாக மயிலாடுதுறை-விழுப்புரம்(06690) இடையே காலை 6 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 11-ந்தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படுகிறது.

விழுப்புரம்-புதுச்சேரி(06737,06799) இடையே அதிகாலை 5.30 மணி மற்றும் மாலை 5.50 மணிக்கும் மறுமார்க்கமாக புதுச்சேரி-விழுப்புரம் (06738,06436) இடையே காலை 8.10 மணி மற்றும் இரவு 7.45 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 11-ந்தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Tags :