Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இல்லை... எரிபொருள் கசிவு இருக்கு: மீண்டும் ஒத்திவைத்தது நாசா

இல்லை... எரிபொருள் கசிவு இருக்கு: மீண்டும் ஒத்திவைத்தது நாசா

By: Nagaraj Sun, 04 Sept 2022 7:17:09 PM

இல்லை... எரிபொருள் கசிவு இருக்கு: மீண்டும் ஒத்திவைத்தது நாசா

அமெரிக்கா: ராக்கெட்டில் ஏற்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் கசிவு காரணமாக நிலவுக்கு ஆய்வுக் கலன் அனுப்பும் திட்டத்தை இரண்டாவது முறையாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஒத்திவைத்தது.

‘கோளாறு சரிசெய்யப்பட வேண்டியிருப்பதால் ராக்கெட்டை ஏவும் அடுத்த முயற்சி வரும் அக்டோபரில்தான் மேற்கொள்ளப்படும்’ என்று நாசா நிா்வாகி பில் நெல்சன் கூறினாா்.

அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கான ‘ஆா்ட்டமிஸ்’ என்ற ஆய்வுத் திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது.

space shuttle,rocket,project,delay,nasa,fuel leak ,விண்கலம், ராக்கெட், திட்டம், ஒத்திவைப்பு, நாசா, எரிபொருள் கசிவு

அதற்கு முன்னோட்டமாக, சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் அந்த ஆய்வுக் கலன் ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவெரலில் உள்ள ஏவுதளத்திலிருந்த ராக்கெட் மூலமாக ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஏவப்படுவதாக இருந்தது. எனினும் ராக்கெட் எரிபொருள் கசிவு மற்றும் என்ஜின் கோளாறு காரணமாக அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.


மீண்டும், அந்த ராக்கெட்டை சனிக்கிழமை இரவு ஏவுவதற்கான கவுன்ட்-டவுனை நாசா தொடங்கியது. இந்த நிலையில், ராக்கெட்டில் மீண்டும் ஹைட்ரஜன் எரிபொருள் கசிவு ஏற்பட்டது. இதனால், ராக்கெட் ஏவும் திட்டத்தை நாசா மீண்டும் ஒத்திவைத்தது.

இதுகுறித்து பில் நெல்சன் கூறுகையில், ‘ராக்கெட் முழுமையாக தயாரான பிறகே அது ஏவப்படும். கோளாறுகள் சரிசெய்யப்பட வேண்டியுள்ளதால், மீண்டும் வரும் அக்டோபரில்தான் ராக்கெட்டை ஏவும் முயற்சி மேற்கொள்ளப்படும். விண்கலத்தில் மனிதா்களை அனுப்புவதற்கு முன்பாக, திட்டம் சரிவர செயல்படுவது உறுதிப்படுத்தப்படும்’ என்றாா்.

Tags :
|
|
|