Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாதாரண துணியால் ஆன முகக்கவசம் கொரோனா வைரசை கட்டுப்படுத்தாது

சாதாரண துணியால் ஆன முகக்கவசம் கொரோனா வைரசை கட்டுப்படுத்தாது

By: Karunakaran Mon, 08 June 2020 3:01:01 PM

சாதாரண துணியால் ஆன முகக்கவசம் கொரோனா வைரசை கட்டுப்படுத்தாது

கொரோனா நோயை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவதை மக்கள் வழக்கமாக்கியுள்ளனர். இருப்பினும் பெரும்பாலோனோர் சாதாரண துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை பயன்படுத்துகின்றனர். மருத்துவ ரீதியாக தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை ஒரு சிலர் மட்டுமே அணிகின்றனர்.

சாதாரண துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் கொரோனா வைரசை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக இடைவெளி சரியாக பின்பற்றப்படும் இடங்களில் மட்டுமே துணிகளால் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை பயன்படுத்தலாம் எனவும், சமூக இடைவெளி பின்பற்றப்படாத இடங்களில் அவை பயனற்றது எனவும் தெரிவித்துள்ளது.

face mask,world health organization,social space,corona ,முகக்கவசம், உலக சுகாதார நிறுவனம்,சமூக இடைவெளி,கொரோனா

இருதய நோய், நுரையீரல் நோய், நீரிழிவு, புற்றுநோய் போன்ற பல நோயுடையவர்கள் கண்டிப்பாக மருத்துவ ரீதியான முகக்கவசம் தான் அணிய வேண்டும். பேப்ரிக்கால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் மட்டுமே கிருமியை தடுக்கும். சாதாரண துணி தடுக்காது.

மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக மருத்துவ ரீதியிலான முகக்கவசத்தை அணிய வேண்டும் எனவும், அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துவது, சமூக விலகலை பின்பற்றுவது நல்ல பலனை கொடுக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags :