Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வட இந்திய மாநிலங்களில் வரும் நாட்களில் உறைபனி அலை வீசும்

வட இந்திய மாநிலங்களில் வரும் நாட்களில் உறைபனி அலை வீசும்

By: vaithegi Thu, 12 Jan 2023 6:39:31 PM

வட இந்திய மாநிலங்களில் வரும் நாட்களில் உறைபனி அலை வீசும்

இந்தியா: தற்போது வடக்கு திசையில் இருந்து வீசும் காற்று காரணமாக இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் நிலவும் அதிக குளிரினால் மக்கள் இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் தங்களது வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து கொண்டு வருகின்றனர்.

தற்போது நிலவும் கடும் குளிரால் மக்கள் பல உடல் நலக் கோளாறுகளுக்கு ஆளாகி உயிரிழக்கும் நிலை ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து இச்சூழலில் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு ஜார்கண்ட், பீகார், பஞ்சாப், டெல்லி உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

frost,north indian states ,உறைபனி , வட இந்திய மாநிலங்கள்

இந்நிலையில் இந்திய வானிலை மையம் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது வட இந்திய மாநிலங்களில் வரும் நாட்களில் உறைபனி அலை வீசும்.

எனவே இதன் காரணமாக வருகிற 14- ம் முதல் 19- ம் தேதி வரை குளிர் மிகவும் அதிகரிக்கும். மேலும் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என எச்சரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|