Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவின் கூட்டுப்போர் பயிற்சிக்கு வடகொரியா கண்டனம்

அமெரிக்காவின் கூட்டுப்போர் பயிற்சிக்கு வடகொரியா கண்டனம்

By: Nagaraj Tue, 15 Aug 2023 1:54:02 PM

அமெரிக்காவின் கூட்டுப்போர் பயிற்சிக்கு வடகொரியா கண்டனம்

வடகொரியா: கூட்டு போர் பயிற்சி... வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடியாக, அமெரிக்கா மற்றும் தென்கொரியா இராணுவம் இணைந்து வரும் ஆகஸ்ட் 21 முதல் 31ஆம் தேதி வரை மிகப்பெரிய கூட்டுப்போர் பயிற்சி நடத்த உள்ளன. இதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஆயுத தொழிற்சாலைகளை பார்வையிட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், போருக்குத் தயாராக இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 ,போர் பயிற்சி, அணு ஆயுத போர், ஒத்திகை, வடகொரியா, கண்டனம்

வடகொரிய அதிபரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்காவும் தென்கொரியாவும் பல்லாயிரக்கணக்கான வீரர்களை கொண்டு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய போர் ஒத்திகை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த போர் பயிற்சி அணு ஆயுத போருக்கான ஒத்திகை என வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags :