Advertisement

அதிநவீன நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியுள்ள வடகொரியா

By: Nagaraj Mon, 11 Sept 2023 6:24:21 PM

அதிநவீன நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியுள்ள வடகொரியா

வடகொரியா: அதிநவீன நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு… அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட அதிநவீன நீர்மூழ்கி கப்பலை வடகொரியா உருவாக்கியுள்ளது. அதனை அதிபர் கிங் ஜாங் உன் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று, எதிரிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட புதிய நீர்மூழ்கிக் கப்பலை வட கொரிய பொறியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.

patrol,advanced,submarine,north korea,project ,ரோந்து பணி, அதிநவீனம், நீர்மூழ்கி கப்பல், வடகொரியா, திட்டம்

‘ஹீரோ கிம் குன் ஆக்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி கப்பல், கடலின் மேற்பரப்புக்கு வராமல் நீருக்குள் இருந்தபடியே ஆயுதங்களை ஏவும் வல்லமை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்மூழ்கி கப்பலை, கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையேயான கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்த வடகொரியா திட்டமிட்டுள்ளது.

Tags :
|