Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் ஊடுருவாமல் வட கொரியா தடுத்துவிட்டது - கிம் ஜாங் உன்

கொரோனா வைரஸ் ஊடுருவாமல் வட கொரியா தடுத்துவிட்டது - கிம் ஜாங் உன்

By: Karunakaran Fri, 03 July 2020 11:50:34 AM

கொரோனா வைரஸ் ஊடுருவாமல் வட கொரியா தடுத்துவிட்டது - கிம் ஜாங் உன்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை எதிர்த்து உலக நாடுகள் போராடி வரும் நிலையில், தங்கள் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டதாக வட கொரியா அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியவுடன் ஜனவரி மாதமே வட கொரியா சர்வதேச விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டதாகவும், ஆயிரக்கணக்கானோரை தனிமைப்படுத்தி வைத்ததாகவும் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு கொரோனா பரவுவது தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

coronavirus,north korea,kim jong un,corona spread ,கொரோனா வைரஸ், வட கொரியா, கிம் ஜாங் உன், கொரோனா பரவல்

இந்நிலையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், ஆளும் தொழிலாளர் கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் பேசியபோது, உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும், வீரியம் மிக்க வைரஸின் ஊடுருவலை நாங்கள் முற்றிலுமாகத் தடுத்துள்ளோம். தொற்றுநோய்க்கு எதிரான ஒரு நிலையான சூழ்நிலையை பராமரித்துள்ளோம், இது ஒரு பிரகாசமான வெற்றியாகும் என்று தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அங்கு மக்கள் பொது இடங்களில் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது வட கொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை என பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :