Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்கொரியாவுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கிறது வடகொரியா

தென்கொரியாவுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கிறது வடகொரியா

By: Nagaraj Tue, 09 June 2020 4:34:24 PM

தென்கொரியாவுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கிறது வடகொரியா

கொரோனா பேரிடர் காலத்திலும் தென்கொரியாவுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கிறது வடகொரியா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவுக்கு எப்படி சீனா தொந்தரவு கொடுத்து வருகிறதோ அதே போல, தென்கொரியாவுக்கு வட கொரியா தொந்தரவு கொடுத்து வருகிறது. கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் கூட லடாக் பகுதியில் சீனா தன் ஆக்கிரமிமைப்பை நிலை நாட்ட முயன்று மூக்குடைப்பட்டது.

சீனாவை போல வடகொரியாவும் தன் பங்காளி நாடான தென்கொரியாவக்கு கொரோனா பேரிடர் காலத்தில் அரசியல்ரீதியாக நெருக்கடியை கொடுத்து வருகிறது. தென்கொரியாவுடன் அனைத்துவிதமான உறவையும் துண்டிக்க வடகொரியா முடிவெடுத்துள்ளதாக அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

north korea,south korea,border,anger,political crisis ,
வடகொரியா, தென்கொரியா, எல்லை, கோபம், அரசியல் நெருக்கடி

மேலும் கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள செய்தியில் '' வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவரின் சகோதரி கிம் யோ ஜாங் மற்றும் ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய குழு துணைத் தலைவர் கிம் யோங் சோல் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் தென்கொரியா பற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் தென்கொரியா நாட்டுக்கு ஒரு எதிரி நாட்டு அந்தஸ்தை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.தென் கொரிய அதிகாரிகளின் துரோகம் மற்றும் தந்திரமான நடத்தையால் வடகொரிய மக்கள் கோபமடைந்துள்ளனர், வடகொரியாவின் உச்ச தலைமையின் மாண்பை காப்பாற்றும் வகையில் தென்கொரியா நடந்து கொள்ளவில்லை. இனிமேல் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எதுவுமே இல்லை'' என்று கூறப்பட்டுள்ளது.

north korea,south korea,border,anger,political crisis ,
வடகொரியா, தென்கொரியா, எல்லை, கோபம், அரசியல் நெருக்கடி

கடந்த சில தினங்களாகவே தென்கொரியாவுடன் அனைத்து உறவுகளையும் துண்டிப்போம்:, எல்லையை மூடிவிடுவோம் என்று வடகொரியா மிரட்டி வந்தது. வடகொரியா தென் கொரியாவுடன் உறவை துண்டிப்பதன் முதல் கட்ட அடையாளமாக இரு நாட்டு ராணுவம், மற்றும் வடகெரியா அதிபர், தென்கொரிய பிரதமர் அலுவலகத்துக்கிடையே இருந்த ஹாட்லைன் இணைப்புகள் இன்று துண்டிக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாக தென்கொரியாவிலிருந்து முதன்முதலில் செய்திகள் வெளியானது. இதையடுத்து, வடகொரிய அதிபருக்கு தென்கொரியா மீது கோபம் உருவாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Tags :
|
|