Advertisement

ஜப்பான் கடலை நோக்கி வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை

By: Nagaraj Thu, 20 July 2023 9:23:01 PM

ஜப்பான் கடலை நோக்கி வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை

வடகொரியா: ஜப்பான் கடலை நோக்கி மீண்டும் வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளுக்கு மத்தியில் அமெரிக்காவுடன் தென்கொரியா கைகோர்த்து தனது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

again,japan,missile,north korea,sea,test ,ஏவுகணை, கடல், சோதனை, ஜப்பான், மீண்டும், வட கொரியா

ஜப்பானும் தென் கொரியாவும் அமெரிக்காவுடன் இணைந்திருப்பது வடகொரியாவை கோபப்படுத்தியது. இதனையடுத்து வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

வடகொரியா சமீபத்தில் குவாசாங்-18 என்ற திட எரிபொருள் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது. இந்த சோதனை நடந்த ஒரு வாரத்தில், ஜப்பான் கடலை நோக்கி வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|