Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

தென்கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

By: Nagaraj Thu, 14 Sept 2023 09:14:53 AM

தென்கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

தென்கொரியா: பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை... தென்கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்து பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உயர் வெடிபொருட்கள், ரசாயனம், அணு ஆயுதம் உள்ளிட்டவற்றை சுமந்து சென்று தாக்கும் வல்லமை படைத்த 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக ஜப்பானும், தென்கொரியாவும் குற்றம் சாட்டியுள்ளன.

north korea,test,russian president,unacceptable,strong condemnation ,வடகொரியா, சோதனை, ரஷ்ய அதிபர், ஏற்க முடியாத, கடும் கண்டனம்

தென்கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் சோதனை செய்யப்பட்ட 2 ஏவுகணைகளுமே, தங்கள் நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாக கூறியுள்ள ஜப்பான், வடகொரியாவின் இந்த செயலை ஏற்க முடியாது என கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சந்திப்புக்கு சிறிது நேரத்திற்கு முன்பாக இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Tags :
|