Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்கொரியாவுக்கு எதிராக 12 லட்சம் துண்டு பிரசுரங்களை அனுப்ப வடகொரியா முடிவு

தென்கொரியாவுக்கு எதிராக 12 லட்சம் துண்டு பிரசுரங்களை அனுப்ப வடகொரியா முடிவு

By: Karunakaran Tue, 23 June 2020 2:45:15 PM

தென்கொரியாவுக்கு எதிராக 12 லட்சம் துண்டு பிரசுரங்களை அனுப்ப வடகொரியா முடிவு

கடந்த 2018-ஆம் ஆண்டு கொரியா எல்லையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரியா அதிபர் மூன் ஜே இன்னும் சந்தித்து பேசினர். இதனால் இரு நாடுகளுக்கிடையே பகைமை நீடிக்காமல் இணக்கமான சூழல் உருவானது. இந்த சந்திப்பின் போது, ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது, அரசையும், தலைவர்களையும் விமர்சிக்கும் துண்டு பிரசுரங்களை எல்லையில் வீசுவது போன்ற விரோத செயல்களை தடுப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்நிலையில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் மற்றும் அவரது ஆட்சியை விமர்சிக்கும் வகையில் சிலர் தென் கொரியாவில் இருந்து துண்டு பிரசுரங்களை வீசி, ஹீலியம் பலூன்களை அனுப்பினர். இதனால் வடகொரியா கடும் கோபமடைந்தது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதை பின்பற்ற தென்கொரியா தவறிவிட்டதாக குற்றம் சாட்டிய வடகொரியா, எல்லையில் உள்ள இரு நாட்டு தொடர்பு அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்தது.

pamphlets,south korea,north korea,helium balloon ,வடகொரியா,தென்கொரியா,துண்டு பிரசுரம்,ஹீலியம் பலூன்

தற்போது தென்கொரியாவுக்கு எதிராக எல்லையில் துண்டு பிரசுரங்களை வழங்கவும், ஹீலியம் பலூன்களை பறக்க விடவும் வடகொரியா திட்டமிட்டுள்ளது. சுமார் 12 லட்சம் துண்டு பிரசுரங்கள் தயார் செய்து கொரிய எல்லையில் வினியோகிக்கப்பட உள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி என்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு எந்திரம் மூலம் எல்லையில் 12 லட்சம் துண்டுபிரசுரங்கள் மற்றும் 3,000 பலன்களை பறக்கவிட முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்கொரியாவுக்கு எதிராக ஒலிபெருக்கி மூலம் பிரசாரங்களை மேற்கொள்ள வட கொரியா எல்லையில் ஒலிபெருக்கிகளை நிறுவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, தென்கொரியா ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் யோ சாங்கே இதுகுறித்து கூறுகையில், தென்கொரியாவுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இந்தத் திட்டம் இரு நாட்டுக்கும் எந்த பயனும் தராது என்று தெரிவித்துள்ளார்.

Tags :