Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தங்களை பாதுகாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்தும் சட்டம்... வடகொரியா எடுத்த முடிவு

தங்களை பாதுகாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்தும் சட்டம்... வடகொரியா எடுத்த முடிவு

By: Nagaraj Sat, 10 Sept 2022 2:21:29 PM

தங்களை பாதுகாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்தும் சட்டம்... வடகொரியா எடுத்த முடிவு

வடகொரியா: வடகொரியா எடுத்துள்ள முடிவு... போர் அச்சுறுத்தல்களின் போது தங்களை பாதுகாத்துக்கொள்ள அணு ஆயுதங்களை தானாகவே பயன்படுத்துவதற்கான சட்டத்தை வடகொரியா இயற்றியுள்ளது.

தனது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பேரழிவு நெருக்கடியைத் தடுக்க அணுகுண்டுகளை தானாகப் பயன்படுத்தலாம் என இந்தச் சட்டம் கூறுகிறது. இதுதொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் உரையாற்றினார்.

south korea,usa,military training,dangerous,nuclear power ,தென்கொரியா, அமெரிக்கா, ராணுவ பயிற்சி, ஆபத்தானது, அணுசக்தி

அப்போது அவர் கூறியதாவது: இந்த சட்டம் நாட்டின் அணுசக்தி நிலையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை. நாட்டின் அணுசக்தியை வலுப்படுத்தும் எண்ணத்தை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றார்.

அமெரிக்காவுடன் பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளும் தென் கொரியாவின் திட்டம் குறித்து கிம் ஜொங்-உன் கூறுகையில், தென் கொரியாவின் நடவடிக்கை வடகொரியாவிற்கு ஆபத்தானது என தெரிவித்துள்ளார்.

Tags :
|