Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வடகிழக்கு இந்தியா இயற்கை, கலாச்சார பன்முகத்தன்மை அடையாளமாக திகழ்கிறது - பிரதமர் மோடி

வடகிழக்கு இந்தியா இயற்கை, கலாச்சார பன்முகத்தன்மை அடையாளமாக திகழ்கிறது - பிரதமர் மோடி

By: Karunakaran Thu, 23 July 2020 7:05:21 PM

வடகிழக்கு இந்தியா இயற்கை, கலாச்சார பன்முகத்தன்மை அடையாளமாக திகழ்கிறது - பிரதமர் மோடி

மணிப்பூர் நீர் வழங்கல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றபோது, மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், வடகிழக்கு இந்தியா இயற்கை, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார வலிமையின் அடையாளமாக திகழ்வதாக கூறினார்.

மேலும் அவர், நவீன கட்டமைப்பை நிறுவியதன் மூலம் தற்போதை சூழ்நிலையில் சுற்றுலா அதிக அளவில் வலிமை பெற்றுள்ளது. மணிப்பூர் போன்ற வடகிழக்கின் சுற்றுலாத்திறன் இன்னும் முழுவதுமாக கண்டுபிடிக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

northeast india,cultural diversity,natural,modi ,வடகிழக்கு இந்தியா, கலாச்சார பன்முகத்தன்மை, இயற்கை, மோடி

வடகிழக்கு இணைப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அது வாழ்வதற்கு மட்டுமல்ல, பாதுகாப்பை இலக்கை அடைவதற்கும, சுயசார்பு இந்தியாவுக்கும். வடகிழக்கு இந்தியா தற்போது கொரோனா, வெள்ளம் ஆகிய இரண்டு சவால்களை எதிர்கொண்டு வருவதாக பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கூறினார்.

மேலும் பேசிய பிரதமர் மோடி, கனமழையால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுமக்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடுமையான நேரத்தில் நாடு உங்களுடன் இருக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Tags :