Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு

By: vaithegi Fri, 20 Oct 2023 12:03:16 PM

தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் இருந்து தென்மேற்குப் பருவமழை அக்.19-ம் தேதி (நேற்று) விலகியுள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்துக்கு 35 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 8 சதவீதம் அதிகம். சென்னைக்கு 77 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 74 சதவீதம் அதிகமாகும்.

இந்நிலையில், வரும் 22-ம் தேதி தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக பெய்யும் அளவிலேயே மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்துக்கு 44 செ.மீ. மழை கிடைக்கும்.தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும். இது நாளை (அக். 21) தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

monsoon,india meteorological center south zone head ,பருவமழை ,இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர்

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுவடைந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

அரபிக்கடல் மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையில் வலு குறைந்து காணப்படும்.

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மாநிலத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என ஆவர் கூறியுள்ளார்.

Tags :