Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வடகிழக்கு பருவமழை தாமதமாக, அக்டோபர் மாத இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை தாமதமாக, அக்டோபர் மாத இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு

By: vaithegi Fri, 13 Oct 2023 12:14:34 PM

வடகிழக்கு பருவமழை தாமதமாக, அக்டோபர் மாத இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு


சென்னை: நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று விலகாத நிலையில், வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இதுகுறித்து கேட்டபோது, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக, ‘தென்மேற்கு பருவமழை தமிழக பகுதியில் விலகி இருக்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் கிழக்கு திசையில் இருந்து வீசும் தரைக்காற்று வலுப்பெற்று இருக்க வேண்டும். தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் பரவலாக மழை பெய்திருக்க வேண்டும்’ என்பன போன்ற நிகழ்வுகள் அடிப்படையில்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும்.

வருகிற அக்டோபர் 13 முதல் 27-ம் தேதி வரையிலான நாட்களில் எப்போது பருவமழை தொடங்கினாலும் அது வழக்கமான நாளாகவே கருதப்படும். இன்னும் தென்மேற்கு பருவமழை விலகவில்லை. அதனால் இந்தாண்டு சற்று தாமதமாக, அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

north east monsoon,coastal region,officials ,வடகிழக்கு பருவமழை, கடலோரப் பகுதி,அதிகாரிகள்

இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகளின்படி 1977-ம்ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே 1984-ம் ஆண்டு அக்.5-ம்தேதி தொடங்கியுள்ளது. 1988, 1992 மற்றும் 2000-ல் மிகவும் தாமதமாக நவ.2-ம் தேதி தொடங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் வழக்கமான நாளாக அக்டோபர் 18 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சுமார் 10 நாட்கள் தாமதமாக தொடங்கும் என்று தெரிகிறது.

இதன் இடையே, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள கணிப்புகளின்படி, இந்தாண்டு வடகிழக்கு பருவமழை, பெரும்பாலான மாவட்டங்களில் வழக்கமான அளவிலேயே இருக்கும். சென்னை, செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் மழைப்பொழிவு வழக்கத்தைவிட சற்று குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :