Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வடகிழக்குப் பருவமழை நவம்பர்9-க்குப் பிறகு தீவிரமடைய வாய்ப்பு

வடகிழக்குப் பருவமழை நவம்பர்9-க்குப் பிறகு தீவிரமடைய வாய்ப்பு

By: vaithegi Fri, 04 Nov 2022 3:27:29 PM

வடகிழக்குப் பருவமழை நவம்பர்9-க்குப் பிறகு தீவிரமடைய வாய்ப்பு

சென்னை : வடகிழக்குப் பருவமழை நவம்பர்9-க்குப் பிறகு தீவிரம் ..... தமிழ்நாட்டில் இன்று பெய்ய உள்ள மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அதில், இன்று வெள்ளிக்கிழமை தென் தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக மிக கனமழை பெய்யும்.

இதையடுத்து வடசென்னையில் மாலைக்கு பின் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்யும். 30 நிமிடத்தில் மொத்தமாக 60 மிமீ மழை பெய்ய எல்லாம் வாய்ப்பே இல்லை. எனவே ஆங்காங்கே பெய்யும் சிறிய அளவிலான மழைகள் எல்லாம் கண்டிப்பாக அச்சுறுத்தும் மழையாக இருக்காது.

northeast monsoon,heavy rain ,வடகிழக்குப் பருவமழை,கனமழை

சென்னையில் இன்று சூரியன் தென்படும். அதே சமயம் இடை இடையே ஆங்காங்கே மழை பெய்யும். நாகை திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள், தென் தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும் என கூறி உள்ளார்.

மேலும் நவம்பர் 9-க்குப் பிறகு காற்றழத்த தாழ்வுப்பகுதி, காற்றழத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் புயலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளதுளார்.

Tags :