Advertisement

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை

By: vaithegi Sat, 21 Oct 2023 12:59:56 PM

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை

சென்னை: இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது .

இதனை அடுத்து நாளை முதல் வருகிற 24.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

northeast monsoon,tamil nadu,puducherry and karaikal ,வடகிழக்கு பருவமழை ,தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்

வரும் 25.10.2023 மற்றும் 26.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். நாளை தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags :