Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு, புதுச்சேரி ஆந்திரா, ஓடிசாவில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்

தமிழ்நாடு, புதுச்சேரி ஆந்திரா, ஓடிசாவில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்

By: vaithegi Sat, 29 Oct 2022 10:48:26 AM

தமிழ்நாடு, புதுச்சேரி ஆந்திரா, ஓடிசாவில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் ..... தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் போன்ற 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால், அண்மையில் வங்கக் கடலில் உருவான சித்ரங் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தமிழகத்தில் தொடங்க இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த முதல் மழைப்பொழிவு அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந்தேதி வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

monsoon,tamil nadu,puducherry andhra,odisha ,பருவமழை , தமிழ்நாடு, புதுச்சேரி ஆந்திரா, ஓடிசா

இதனை அடுத்து இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி ஆந்திரா, ஓடிசாவில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் நவம்பர் 1, 3 ஆகிய தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திரா, வடதமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளது.

Tags :