Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நாளை தொடக்கம்

By: vaithegi Sat, 21 Oct 2023 09:50:39 AM

தமிழ்நாட்டில்  வடகிழக்குப் பருவமழை நாளை தொடக்கம்


சென்னை: நேற்றுமுன்தினம் காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. இது நேற்று காலை (20-10- 2023) 0830 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது.

இதையடுத்து இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இது மேலும் வலுவடைந்து வருகிற 22-10-2023 மாலை தீவிர புயலாக நிலவக்கூடும். இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 24-10- 2023 வாக்கில் தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய ஏமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும்.

northeast monsoon,low pressure ,வடகிழக்குப் பருவமழை,காற்றழுத்த தாழ்வு


மேலும் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த 2 தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும். வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறி உள்ளது.

Tags :