Advertisement

ஸ்மார்ட் சிட்டி அல்ல..பொதுமக்கள் கருத்து..

By: Monisha Thu, 14 July 2022 7:54:40 PM

ஸ்மார்ட் சிட்டி அல்ல..பொதுமக்கள் கருத்து..

கோயம்புத்தூர்: கோயமுத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு மழை தொடர்ந்து பெய்து வருகிறது.இருப்பினும் மழைநீர் வடிகால் வசதி போதுமானதாக இல்லாததால் சாலை முழுவதும் சிறு சிறு குட்டையாக செந்நிறத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் பள்ளம் மேடு தெரியாமல் வாகனங்களை குழிக்குள் விட்டு விழுந்து வாருகின்றனர். மேலும் அவர்களது வாகனமும் சேதம் அடைகிறது.

அதனைத் தொடர்ந்து பள்ளங்களை நிரப்ப பெரிய நிறுவனங்கள் தானாக முன்வந்து செட் பண்ணிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் ஸ்மார்ட் சிட்டி என்று பெருமையாக பேசப்படும் கோவை சாலைகளில் குறிப்பாக கேரளா செல்லும் பிரதான சாலையான உக்கடம் சாலையை தொடர்ந்து ஆற்றுப்பாலத்தில் இருந்து போத்தனூர் ரயில் நிலையம் செல்லும் சாலைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

smart city,public,rain,road , ஸ்மார்ட் சிட்டி ,மழை,பள்ளம் ,தண்ணீர் ,

மேலும் இதைத் தவிர கோவை மாநகர பகுதிகளில் குறிப்பாக பள்ளிகள் அருகில் உள்ள சாலைகள் குண்டும் பொழியுமாக உள்ளது.அதில் வாகன ஓட்டிகள் பயணம் செய்வதால் உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும், அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை எடுத்து கோவை வாசிகள் பொதுவான கோரிக்கையாக மாநகராட்சி நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|