Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • TN TET இரண்டாம் தாள் தேர்வு முடிவுகளில் 2 விழுக்காடு ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை

TN TET இரண்டாம் தாள் தேர்வு முடிவுகளில் 2 விழுக்காடு ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை

By: vaithegi Wed, 29 Mar 2023 12:04:10 PM

TN TET இரண்டாம் தாள் தேர்வு முடிவுகளில் 2 விழுக்காடு ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை

சென்னை: தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET Paper – 2 தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.

இதையடுத்து இந்த தேர்வுக்கு சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2,54,224 மட்டுமே தேர்வை எழுதினர். மேலும் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வை எழுத வருகை புரியவில்லை.

இந்த தேர்வின் முடிவுகள் நேற்று மாலை இணையதளத்தில் வெளியானது. இதில் 2 விழுக்காடு ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

teachers,second paper exam ,ஆசிரியர்கள் ,இரண்டாம் தாள் தேர்வு

மேலும் 98% பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற TET Paper – 1 தேர்வில் 1,53,233 பேர் பங்கேற்றனர்.

அதில் 21, 543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுனர். சுமார் 5% பேர் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்ச்சி சதவீதம் கல்வியின் தரம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags :