Advertisement

பொங்கல் பரிசுத்தொகையை இத்தனை பேர் வாங்கவில்லை

By: vaithegi Mon, 30 Jan 2023 7:26:43 PM

பொங்கல் பரிசுத்தொகையை இத்தனை பேர் வாங்கவில்லை

சென்னை: 4 லட்சத்து 40,000 பேர் வாங்கவில்லை ...... தமிழக மக்களின் பாரம்பரிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் ரொக்கத்தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

அந்த வகையில் இந்தாண்டு அரசு சார்பில் ரூ.1000 மற்றும் பொங்கல் வைக்க தேவையான பொருள்கள் வழங்கப்பட்டது. மேலும் ஏழை எளிய மக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் அரசு இந்த பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத் தொகை வழங்குகிறது.

pongal gift,govt ,பொங்கல் பரிசு,அரசு

இதனை அடுத்து பொதுமக்களுக்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்டு பொருள்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு 1,000 ரூபாயை 4 லட்சத்து 40,000 பேர் வாங்கவில்லை என்று கூட்டுறவு துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவும், பொங்கல் பண்டிகை முடிந்த பின் கூட பலருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்ட நிலையில், பலர் ரொக்கம் வாங்காமல் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags :