Advertisement

ரஷ்யாவை கட்டுப்படுத்தவோ, அழிக்கவோ நினைக்கவில்லை

By: Nagaraj Wed, 22 Feb 2023 9:21:04 PM

ரஷ்யாவை கட்டுப்படுத்தவோ, அழிக்கவோ நினைக்கவில்லை

வார்சா: ரஷ்யாவை கட்டுப்படுத்தவோ, அழிக்கவோ அமெரிக்காவும், ஐரோப்பா நாடுகளும் முயற்சிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடங்கி ஓராண்டு நிறைவடைகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைன் சென்றார்.

ரஷ்யப் படையெடுப்பிற்குப் பிறகு முதன்முறையாக உக்ரைனுக்குச் சென்ற அவர், அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்தார். இரு தரப்பினரும் தாக்குதலைத் தொடங்கத் தயாராகி வரும் நிலையில் ஜோ பைடனின் திடீர் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ukraine,joe biden,russia,invasion,kiev ,உக்ரைன், ஜோ பைடன், ரஷ்யா, படையெடுப்பு, கீவ்

இந்நிலையில் போலந்து சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைநகர் வார்சாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரஷ்யாவை கட்டுப்படுத்தவோ, அழிக்கவோ அமெரிக்காவும், ஐரோப்பா நாடுகளும் முயற்சிக்கவில்லை.

அண்டை நாடுகளுடன் சமாதானமாக வாழ விரும்பும் மில்லியன் கணக்கான ரஷ்ய குடிமக்கள் எதிரிகளாக பார்க்கவில்லை. உக்ரைன் ஒருபோதும் ரஷ்யாவிற்கு வெற்றியாக இருக்காது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு ஒரு வருடம் கழித்து, தலைநகரான கீவ் வலுவாக நிற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|