Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Fri, 08 Sept 2023 2:02:12 PM

வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18 ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இயங்காது ... தமிழகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது மேலும் , விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கும் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி விடுமுறை என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து இதற்கு முன்பு, விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்பட இருந்த நிலையில் தற்போது தமிழக அரசின் சார்பில் பொது விடுமுறை பட்டியலில் செப்டம்பர் 18-ம் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

holiday,ration shop ,விடுமுறை ,ரேஷன் கடை


எனவே இதன் அடிப்படையில், ரேஷன் கடைகளுக்கான விடுமுறை நாளையும் செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை கமிஷனர் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

மேலும், இந்த அரசு விடுமுறை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முன்கூட்டியே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை ரேஷன் கடைகளின் வாயிலாக பெற்றுக்கொள்ளும்படி உத்தர விடப்பட்து இருக்கிறது.

Tags :