Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு ...ஜூலை 24 வரை விண்ணப்பிக்கலாம்

பொறியியல் இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு ...ஜூலை 24 வரை விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Fri, 24 June 2022 6:43:00 PM

பொறியியல் இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு  வெளியீடு ...ஜூலை 24 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம்: தமிழக கல்லூரிகளில் 2022 – 2023 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. கலை & அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூன் 20ம் தேதி முதல் பொறியியல் படிப்பில் சேர மாணவ, மாணவிகள் https://www.tneaonline.org/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர். முதல் நாளன்றே சுமார் 18,000 பேர் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் பொறியியல் படிப்பு இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. டிப்ளமோ, பி.எஸ்சி., பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பில் சேர தகுதியுடையோர்.

student admissions,engineering,students ,மாணவர் சேர்க்கை,பொறியியல் ,மாணவிகள் ,

மேலே சொன்ன கல்வி தகுதி பெற்றவர்கள் பொறியியல் அரசு, அரசு உதவி பெறும், அண்ணா பல்கலை துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலை, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில், நடப்பாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள கல்லுாரிகள், பாடப்பிரிவுகள் குறித்தும் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Tags :