Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக தற்காலிக பணிநியமன ஆசிரியர்கள் திருப்தி அளிக்கவில்லையெனில் ...பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிப்பு

தமிழக தற்காலிக பணிநியமன ஆசிரியர்கள் திருப்தி அளிக்கவில்லையெனில் ...பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிப்பு

By: vaithegi Sat, 02 July 2022 4:39:02 PM

தமிழக தற்காலிக பணிநியமன ஆசிரியர்கள் திருப்தி அளிக்கவில்லையெனில் ...பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிப்பு

தமிழகம்: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கிட்டதட்ட 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனால், தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலமாக உடனடியாக பணியிடங்கள் நிரப்பப்படுவது என்பது முடியாத காரியம். இதனால், தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பணியிடங்களை நிரப்பலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இவ்வாறு விண்ணப்பிப்பவர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

dismissal,temporary teachers ,பணி நீக்கம் ,தற்காலிக ஆசிரியர்கள்

மேலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்கள் மற்றும் பணிக்கு வருவதற்கு ஏதுவாக பள்ளிக்கு அருகே வசிப்பவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஜூலை 4 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் ஆசிரியர் பணி திருப்தி அளிக்கவில்லை எனில் உடனடியாக அந்த ஆசிரியர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :